கல்வி & வேலைவாய்ப்பு
இந்திய தபால் துறையில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - பிப்ரவரி 29ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள்!
தபால் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில், Welder பிரிவில் 2 இடங்களும், TyreMan பிரிவில் 2 இடங்களும், Tinsmith பிரிவில் ஒரு இடங்களும், Black Smith பிரிவில் ஒரு இடமும், Motor Vehicle Mechanic பிரிவில் 2 இடங்களும் காலியாக உள்ளன.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, Welder, TyreMan, Tinsmith, Black Smith, Motor Vehicle Mechanic ஆகிய தொழிற்பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். அல்லது, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய தொழிற்பிரிவுகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Motor Vehicle Mechanic வேலைக்கு கூடுதலாக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 ஊதியம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் திறன் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.indiapost.gov.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய முகவரி,
The Senior Manager,
Mail Motor Services,
134-A, S.K.AHIRE MARG,
Worli, Mumbai - 100 018.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 29.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !