India
“இத விட உங்களுக்கு கிழிக்கிற வேலையும் இல்ல.. வேற ** இல்ல..” - IAS IPS அதிகாரிகளை ஆபாசமாக பேசிய தவெக MLA!
முதலமைச்சர் விழாக்களில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொள்வதைவிட என்ன கிழிக்கிற வேலை அவர்களுக்கு இருக்கிறது என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்சரவணன் குமார் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு நேற்று (நவ.19) முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது இந்த நிகழ்ச்சியில் திருபுவனை தவெக எம்.எல்.ஏ. சாய்சரவணன் குமார் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக எம்.எல்.ஏ. சாய்சரவணன் குமார் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் பேசியதாவது..
"புதுச்சேரியில் சட்டசபை செத்துப் போய்விட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில், அத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பெரும்பான்மையான அதிகார மையமும் இருக்க வேண்டும். ஆனால் இன்று வராதது மிகவும் வெட்கக்கேடானது.
புதுச்சேரியில் 27-க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ், 10-க்கு மேற்பட்ட ஐ.பி.எஸ் இருந்தும், ஒருவர் கூட இந்த விழாவுக்கு வரவில்லை. இது போன்ற தலைவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் மரியாதை செலுத்த வரும் போது அத்தனை பேரும் இங்கே இருக்க வேண்டும். ஆனால் யாரும் இங்கு இல்லை.
IAS, IPS எல்லாம் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். இதை விட உங்களுக்கு கிழிக்கிற வேலை இல்ல.. வேற பு** வேலையும் இல்ல" என்று ஆபாசமாக அவமரியாதையாக பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வரும் முன்பும் சரி, வந்த பின்பும் சரி அரசு அதிகாரிகள், சட்டம் என எதையும் மதிக்காத நிலையில், தற்போது புதுச்சேரியில் உள்ள தவெக எம்.எல்.ஏ. அரசு அதிகாரிகளை அநாகரிகமாக பேசியுள்ளது அனைவர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கேலிச்சித்திரத்தை உடனே நீக்க வேண்டும்” : ஜூனியர் விகடனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
இதற்கும் DGP-ஐ விட்டுச் சமாளிக்கப் போகிறாரா Dummy CM? : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
புதிய பாதை இல்ல... விஜய் காட்டுவது ‘புதிய போதை’... - பட்டியலோடு சரமாரியாக விமர்சித்த திமுக இளைஞரணி!
-
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்? : த.வெ.க அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!