India
டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சி போராட்டம்: நாடாளுமன்றத்திற்குள் பதுங்கிய பிரதமர் மோடி!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் பேரணி நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
அப்போது அவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளையும் மீறி இளைஞர்கள் முன்னோக்கிச் சென்றதால், காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர்.
ஆயினும், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல்துறை அராஜகமாக நடந்துகொண்டது. அதோடு, இந்தப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
மேலும், இளைஞர்கள் அதிக அளவில் கூடிவிடக் கூடாது என்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே அமர்ந்து இளைஞர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும், ஜந்தர் மந்தரை நோக்கி இளைஞர் படை தொடர்ந்து குவிந்த வண்ணமே உள்ளது.
இதனால் அச்சமடைந்த ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில்களை மூடியுள்ளதுடன், 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அங்கே குவித்துள்ளது.
இதற்கிடையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை ஒன்றிய பா.ஜ.க அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்தத் திடீர் பேரணியால் தற்போது டெல்லி மாநகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
Also Read
-
முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!
-
குதிரை பேரம் - சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும் : முரசொலி!
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
-
‘நாடாளுமன்றம் நோக்கிய இளைஞர்கள் பேரணி.. காவல் துறை தடியடிக்கு கண்டனம்’ : திமுக தலைமைக் கழகம்!