India
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அசாம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேபோல், 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது; இதில் 85.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 29-ஆம் தேதியான இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது கருத்துக்கணிப்பு (Exit Polls) முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், அசாம் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும் என அதிகமான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று Matrize, Poll DIARY, Chanakya Strategies ஆகிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள. ஒரு சில கருத்துக்கணிப்புகள் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என பல கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிய பிடிக்கும் என்று AXIS INDIA, P MARX, MATRIZE ஆகியவை கணித்துள்ளது. சில கணிப்புகள் இரு கூட்டணிகளுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாகக் குறிப்பிடுகின்றன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று People's Pulse, Matrize,P-MARQ, Today's Chanakya, NDTV உள்ளிட்ட பல கணிப்புகள் முடிவுகளை அறிவித்துள்ளன.
Also Read
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!