India
“சென்னை - பெங்களூரு இடையிலான NH-40 எப்போது பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி கிரிராஜன் கேள்வி!
நாடாளுமன்றத்தின் 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன.28 அன்று ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், நேற்றைய நாள் (பிப்.05) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“சென்னை - பெங்களூரு NH-40ஐ மேம்படுத்தும் திட்டம் நிறைவுறுவது எப்போது?” என நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர் ஆர்.கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் நிறைவு செய்ய ஒன்றிய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?
கடந்த நான்கு ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்றும் சென்னை, பெங்களூரு மற்றும் வேலூரை இணைக்கும் NH-40 நெடுஞ்சாலைக்கான ரூ.1,338 கோடி மதிப்பிலான திட்டத்தை விரைவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதா ஒன்றிய அரசு?” என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு,
“தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ஒன்றிய அமைச்சகம் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன?
அறிவார்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், தானியங்கி பிரேக்கிங், சாலை சென்சார்கள் விபத்து கண்டறியும் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் குறித்து அரசின் திட்டங்கள் என்ன?
விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை கொண்டு செல்ல எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் யாவை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!