India
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.2) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி, “தூத்துக்குடியில் கடற்பாசி பூங்காக்களை அதிகப்படுத்த நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,
“தூத்துக்குடி மாவட்டத்தில் PMMSY திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட கடற்பாசி பூங்காவின் பணிகள் தொடங்குவதற்கான தற்போதைய நிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன?
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்பாசி சாகுபடியில் ஈடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் என்ன?
சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் கப்பாஃபிகஸ் அல்வரேசி போன்ற ஆக்கிரமிப்பு கடற்பாசி இனங்களை வளர்ப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் என்ன?
தற்போதைய கடற்பாசி உற்பத்தி நிலைகளுக்கும் கடற்பாசி சார்ந்த மூலப்பொருட்களுக்கான தொழில்துறை தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?”
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார்! : முழு விவரம் உள்ளே!