India
பீகார் தேர்தல் : இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார்? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் பரிசீலனை முடிவுற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்றது.
இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
துணை முதலமைச்சர் வேட்பாளராக விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனத் தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் ஒரு முக்கிய தேர்தலாக அரசியல் பட்டத்தில் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!