India

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு : பழிவாங்கும் ஒன்றிய அரசு!

கேரளாவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, ஒன்றிய அரசிடம் கேரள அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன்படி, அக்டோபர் 16 முதல் பக்ரைன், சவுதி அரேபியா, ரியாத் ஆகிய நாடுகளுக்கு செல்ல கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதி கோரியிருந்தார். மலையாளம் மிஷன் தொடர்பான 15 நாள் பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இந்த பயணத்தில் கத்தார், குவைத், அபுதாபி நகரங்களிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் எந்த காரணமும் கூறாமல் கேரள முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்கு ஒன்றிய வெளிறவுத்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே, கேரள முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Also Read: தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகள் - 3 லட்சம் நுகர்வோர்கள் பயன் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!