India
திடீர் மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல.. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுவது என்ன ?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள், நாட்டில் ஏற்படும் திடீர் மரண அறிக்கைகளுக்கும் COVID-19 தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துள்ளது.
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, நாட்டில் பல நிறுவனங்கள் மூலம் விவரிக்கப்படாத திடீர் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் கோவிட்-19 தடுப்பூசிக்கும் நாட்டில் ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்த அறிக்கைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை உறுதியாக நிறுவியுள்ளன.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள், இந்தியாவில் COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் COVID-19 தடுப்பூசி காரணமாக கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்றும், திடீர் இதய இறப்புகள் மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நிலைமைகள் மற்றும் COVID-க்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!