India
தாஜ்மகால் குவிமாடத்தில் நீர் கசிவு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தொல்லியல் துறை... சரி செய்ய முடியுமா ?
முகலாய மன்னரான ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மகாலுக்கு தற்போது 372 வயதாகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மகாலை ஆண்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 80 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் மூலம் தாஜ்மகால் அமைந்துள்ள உத்தரபிரதேச அரசுக்கு மட்டும் 98 கோடி நேரடி ஆண்டு வருவாயாக கிடைக்கிறது. இப்படி மக்களை தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டிருக்கும் தாஜ்மகால் பிரதான குவிமாடத்தில் தற்போது நீர் கசிவு கண்டறியப்பட்டதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.
தொல்லியல் துறை ஆண்டு தோறும் நடத்தும் பராமரிப்பு சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒளியை பாய்ச்சி நடத்திய சோதனையின் போது 73 அடி உயர குவிமாடத்தின் கசிவு கண்டறியப்பட்டது. குவிமாட பளிங்கு கற்கள் இடையே உள்ள மோட்டார் பகுதியில் இந்த கசிவு தென்பட்டுள்ளது.
குவி மாடத்தை தாங்கி உள்ள இரும்பு லேசாக துருப்பிடித்த நிலையில் இருப்பதால் இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குவி மாட கதவும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். பணிகள் முடிவடைய 6 மாதங்கள் பிடிக்கும் என்று தாஜ்மகால் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !