India

பிரிவினை அரசியல் பேசும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா : சுப்ரியா ஸ்ரீநேட் கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியை மூன்றாவது மொழியாகவும், அலுவல் மொழியாகவும் திணிக்கப்பார்க்கிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிரத மொழியை பல்வேறு வடிவங்களில் திணிக்க முயற்சி செய்து வருகிறது.

இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட அலுவல் கடிதங்களை இந்தியில் அனுப்பி, தங்களது இந்தி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா," நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் "”நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலைகுனியும் காலம் விரைவில் வரும்” என அமித் ஷா பேசி இருக்கிறார். இவர் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. நொறுங்கிக் கிடக்கும் தேசிய பாதுகாப்பு பிரச்சினை அந்த பட்டியலில் முதலில் இருக்கிறது. ஆனாலும் இந்த மனிதர் பிரிவினை அரசியலில்தான் கவனம் செலுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: பண மோசடி வழக்கு: பாய்ந்த குண்டாஸ்.. புழல் சிறையில் தள்ளப்பட்ட பாஜக மு. நிர்வாகி மிளகாய்ப்பொடி வெங்கடேசன்!