India
”மோடி ஆட்சியால் இந்தியாவை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்கள்” : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
‘நிகர அந்நிய நேரடி முதலீடு சரிவு, நாட்டில் மிகப்பெரிய முதலீட்டு நிச்சயமற்ற தன்மையைபிரதி பலிக்கிறது' என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையில், 2824--25ம் ஆண்டில் இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீடு வரவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 96 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 8.4 பில்லியன் டாலர்களாக (ரூ.3, 400 கோடி) குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே காலகட்- டத்தில் கடந்த ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 10.1 பில்லியன் டாலராக (ரூ.85,850 கோடி) இருந்தது. கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில்இருந்து தங்கள் பணத்தை வெளியில் எடுத்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “இந்த திடீர் வீழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தைமறைக்க வெள்ளையடிக்கும் செயல்கள் எதுவாக இருந்தாலும், இது இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டு நிச்சயமற்றதன்மையைபிரதிபலிக் கிறது என்பதே உண்மை.
வெளிநாட்டுமுதலீட்டா ளர்கள் மட்டுமல்ல; இந்திய நிறுவனங்களும் உள்நாட்டில் முதலீடு செய்வதை விட வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்புவதை காட்டுகிறது என கூறி உள்ளார்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!