India

முகத்தில் சிறுநீர் கழித்து பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க MLA மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

கர்நாடகாவில் பா.ஜ.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முனிரத்னா. இவர் மீது பா.ஜ.க கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகாரில், தன் மீது பொய்யாக சுமத்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தான அவரது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். இவரை நம்பி நான் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன்.

அப்பேது அங்கு இருந்த முனிரத்னாவும் மற்ற இரண்டு நபர்களும் திடீரென எனது ஆடைகளை கிழித்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது முனிரத்தனா எனது முகத்தில் சிறுநீர் கழித்து கொடூரமான முறையில் நடந்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் என் மீது ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார்கள். பிறகு இது பற்றி வெளியே சொன்னால் உனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். இதனைத் தொடர்ந்து எனது உடல் பாதிக்ககப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

அப்போது மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத வைரஸ் தொற்று உடலில் பரவி இருப்பதாக கூறினார்.பிறகு நான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன்.இந்நிலையில்தான நான் முனிரத்னா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என காவல்நிலையத்தை நம்பி வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனிரத்னா மீது பாலியல் புகார் வருவது இது முதல்முறை கிடையாது. 2020,2022,2024 ஆம் ஆண்டுகளிலும் இவர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது.

Also Read: பொள்ளாச்சி விவகாரம் : “வெட்கமில்லாமல் எப்படி அறிக்கைகள் விடுகிறார்?” - பழனிசாமியை கிழித்தெடுத்த முரசொலி!