India
முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை
கடந்த ஆண்டு ஜூன் 13, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டு ஜனவரி 23, மார்ச் 22 தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
எனினும் அதனை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு அனுமதி மறுத்து வருகிறது. அணையை பராமரித்தால் தமிழ்நாடு அரசு 152 அடியாக உயர்த்த வலியுறுத்தும் என்பதால் அதற்குரிய அனுமதியை மறுத்து வருகிறது.
எனவே, மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு பணியாளர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதற்கு உரிய படகுகள் செல்வது, சாலை அமைப்பது, மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!