India
நிறுத்தப்பட்ட தாக்குதல்கள்.. இயல்பு நிலை திரும்பும் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்கள் !
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனிடையே மாலை 5 மணி அளவில் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்திருந்தார்.ஆனால் இரவு 8.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை வைத்து இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து எந்த தாக்குதலும் நடைபெறாத நிலையில், எல்லை மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு இயல்பு நிலை திரும்பி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!