India
”தமிழ்நாடை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” : வக்ஃப் தீர்மானம் நிராகரிப்பு - மெகபூபா முப்தி கண்டனம்!
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்ஃப் சட்ட திருத்த மசோதாகை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், இதை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது.குறிப்பாக இந்த மசோதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, உச்சநீதிமன்றததை எதிர்க்கட்சிகள் நாடியுள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,
ஜமாயத் உலமா, சமஸ்த கேரளா ஜாமாயத் உலமா, அசாசுதின் ஒவாசி எம்பி, டெல்லி எம்.எல்.ஏ அமானுதுல்லா கான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தேசிய மாநாட்டு உறுப்பினர்கள் நசீர் குரேசி, தன்வீர் சாதிக் ஆகியோர் தனிதீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால் இந்த தனி தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தாமல் சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
இத்தீர்மானம் நிராகரிப்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,”ஜம்மு- காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தது மிகவும் வேதனை அளிக்கிறது. வக்ஃபு மசோதாவை உறுதியுடன் எதிர்த்த தமிழ்நாடு அரசிடம் இருந்து ஜம்மு- காஷ்மீர் அரசு கற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு- காஷ்மீரில் வக்ஃப் மசோதா குறித்து விவாதிக்க அரசுக்கு துணிவு இல்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!