India
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் : இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்துவதாக கூறி வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை , கடந்த ஆண்டு மக்களவையில் ஆகஸ்ட் மாதம் ஒன்றிய பா.ஜ.க அரசு அறிமுகம் செய்தது. அப்போது இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பா.ஜ.க எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு இம்மசோதா அனுப்பப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தையும் இக்குழு நிராகரித்து, பா.ஜ.க உறுப்பினர்கள் வைத்த திருத்தங்களை மற்றும் ஏற்றுக்கொண்டு 655 பக்க அறிக்கையை இக்குழு தயாரித்தது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகளின் எதிர்ப்புகளை மீறி இன்று மக்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூ தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது.
ரம்ஜான் பாண்டிகை முடிந்த அடுத்த இரண்டு நாளிலேயே இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு இம்மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களுக்கு விரோதமான அரசு என்பதை இதன் மூலம் ஒன்றிய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!