India
டெல்லி தேர்தல் முடிவு : முதலமைச்சர் அதிஷி வெற்றி - முழு விவரம் இங்கே!
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்.5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பிறகு மிண்ணணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. துவக்கத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.கவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் அதிஷி தொடக்கத்தில் இருந்தே பின்தங்கி வந்தார். இருப்பினும் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை 3580 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஆட்சியை பிடிக்க 36 இடங்கள் தேவை என்றி நிலையில் 47 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தாங்கள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!