India
முல்லைப் பெரியாறு அணை : ஏழு உறுப்பினர்கள் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவு !
தமிழ்நாட்டின் தேனி, மதுரை பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரங்கள் வழங்கும் அணையாக முல்லைப் பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணி கேரளாவில் அமைந்துள்ள நிலையில், இந்த அணை கண்காணிப்பு குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழு அமைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஏழு உறுப்பினர்கள் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. .
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கேரளா சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அணைகள் ஆய்வு அதிகாரி ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?