India

55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : பாப்கார்ன் முதல் பேனாக்கள் வரை... 148 பொருட்களுக்கு உயர்கிறது GST?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று (டிச.21) 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், மாநில நிதியமைச்சர்களும் கலந்துகொண்ட நிலையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் பாப்கார்ன், ஷூ, ஆடை, கடிகாரங்கள், பேனாக்கள் என 148 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா தியேட்டர்களில் வழங்கப்படும் Pack செய்யப்படாத பாப்கானுக்கானுக்கு 5% வரியும், இதுவே உப்பு மற்றும் பெப்பர் போட்டு பேக் செய்யப்பட்டு லேபிள் இடப்படாமலோ பாப்கானுக்கு 12% வரியும், கேரமல் (Caramel) பாப்கானுக்கானுக்கு 18% வரை வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் உடுத்தும் ஆடைகளை பொறுத்தவரையில், தவிர, ஆடைகளை எடுத்துக்கொண்டால், ரூ.1000-க்கும் மேல் விலை கொண்ட ஆடைகளுக்கான வரி 5%-லிருந்து 12% ஆகவும், ரூ.15,000-க்கும் அதிகமான விலை கொண்ட ஷுக்களுக்கு ஜிஎஸ்டி வரி 18%-லிருந்து 28% ஆக உயர்த்தவும், பழைய கார்களுக்கான வரி 18% ஆக உயர்த்தவும் கவுன்சில் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு (Sin goods) 5%, 12%, 18%ம், 28% என்ற நான்கடுக்கு வரி விகிதங்களுக்கு பதிலாக தனியாக 35% வரி விகிதத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வரி குறைப்பை பொறுத்த அளவில், மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தனிநபர்களை பொறுத்த அளவில், ரூ.5 லட்சம் வரையிலான கவரேஜ் கொண்ட காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு இந்தக் கூட்டதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாம்பல் உள்ளடக்கம் கொண்ட ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் கான்கிரீட் (Autoclaved aerated concrete (AAC)) பிளாக்குகள் ஹெச்எஸ் 6815 குறியீட்டின் கீழ் வரும் என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12% ஆக குறைக்கப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களின் கூட்டத்தில் ஒருமித்த கருத்துகள் எட்டப்படாததால், ஆய்வுக்காக காப்பீடு தொடர்பான விஷயங்களை கவுன்சில் ஒத்திவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய தங்கம் தென்னரசு!