India
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடந்த ஒருவாரமாகவே காற்று தரக் குறியீடு 400க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த முதல்வர் அதிஷி மர்லினா வலியுறுத்தியுள்ளார். அதேபோல், ஒன்றிய அரசு அலுவலங்களின் நேரமும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
காற்று மாசு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ராகுல் காந்தி, ”சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றனர். குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள். ஏழைக் குடும்பங்கள் நச்சுக் காற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
காற்று மாசு விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகள் இருக்கக்கூடாது. கூட்டுமாசுவை போக்க அரசாங்கங்கள், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு கூட்டு முயற்சி தேவை.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது எம்.பி.க்கள் அனைவருக்கும் கண்கள் எரிச்சல் மற்றும் தொண்டை வலி நினைவுக்கு வரும். காற்று மாசால் ஏற்படும் இந்த நெருக்கடியை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பாகும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !