India
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
டெல்லியில் போதைப்பொருள் புழக்கம், அண்மையில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினரால் அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் 24 மணிநேர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1,225 காவலர்கள் நடத்திய சோதனைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த 700க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, “போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 கிலோ கஞ்சா, 870 கிராம் ஹெராயின், 434 கிராம் எம்.எம்.டி.ஏ மற்றும் 16 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என டெல்லி காவல் கண்காணிப்பாளர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, போதைப்பொருட்களுடன் 6 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பிடிபட்டன என டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!