India
தெரியாமல் 20 செ.மீ. Tooth Brush-ஐ விழுங்கிய பெண்... ஷாக்கான மருத்துவர்கள்... பிறகு நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வழக்கம்போல் காலை நேரத்தில் Tooth Brush-ஐ வைத்து பல் துலக்கியுள்ளார். அப்போது அதே Tooth Brush-ஐ கொண்டு அவரது நாக்கை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் தெரியாமல் அதனை விழுங்கியுள்ளார். இதனால் பெரும் பயமடைந்த அந்த பெண்ணை, குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து DY பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அங்கே அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த Tooth Brush வயிற்றில் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் காயம் ஏதும் ஏற்படாமல் Tooth Brush-ஐ வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “40 வயது பெண் ஒருவர் 20 செ.மீ Tooth Brush-ஐ முழுவதுமாக விழுங்கியதை அறிந்து ஆச்சரியமடைந்தோம். முதலில் இது சாத்தியமில்லை என்று தோன்றியது. பின்னர் இதனை குறித்து அறிந்து மருத்துவர் குழு ஆலோசித்து அந்த Tooth Brush-ஐ அகற்றினோம்.
இது போன்ற சம்பவம் மிகவும் அரிதான ஒன்று. இதுவரை உலகளவில் சுமார் 30-க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் இது போன்ற நிகழ்வு இதுவே முதல்முறை. மேலும் ஸ்கிசோஃப்ரினியா, புலிமியா போன்ற மன அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற செயலை செய்வர். ஆனால் இந்த பெண்ணுக்கு அப்படி எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை." என்றார்.
தவறுதலாக 20 செ.மீ. Tooth Brush-ஐ பெண் ஒரு விழுங்கியுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!