India
வயநாட்டில் வேட்புமனு தாக்கல்! : முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி!
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவில் தொடங்கி, காந்தி குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸில் பல பொறுப்பு வகித்தவர்களாக இருக்கின்றனர்.
நேருவின் மகள் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக விளங்கினார். அவரின் மகன் ராஜீவ் காந்தியும் பிரதமர் பதவி வகித்தவரே.
இவர்கள் வரிசையில், ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, தனது 17 வயது முதல் காங்கிரஸின் பல்வேறு தலைவர்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக ஓராண்டு காலம் பொறுப்பு வகித்த பிரியங்கா காந்தி, 2020ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்ற வயநாடு மக்களவைத் தொகுதியில், தனது அரசியல் வாழ்வில் முதன்முறையாக போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் நிர்வாகியாக பலமுறை தேர்தலைக் கண்ட பிரியங்கா காந்தி, முதன்முறையாக தேர்தலை வேட்பாளராக களம் காண இருப்பதால், இந்திய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!