India
பாலியல் குற்றவாளிகளின் புகலிடம் பா.ஜ.க : 6 வயது மாணவி கொலை வழக்கில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
குஜராத்தில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜ.க ஆதரவாளர் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷக்திசிங் கோஹில், "குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், தனது காரில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரமான செயலை செய்தவர் தன்னை ஒரு சமூக சீர்த்திருத்த வாதி என்றும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார்.
குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதுபோன்று நடந்தால் பா.ஜ.க வாய்திறக்கிறது. ஆனால் இப்போது பா.ஜ.கவினரும் பிரதமர் மோடியும் அமைதியாக உள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.கவினர் கைதாகி இருக்கிறார்கள். பா.ஜ.க யுவமோர்ச்சா பொதுச் செயலாளர் கௌரவ், சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
பா.ஜ.க தலைவர் ஆகாஷ் பகவான் பாய், திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாலியல் குற்றவாளிகளின் பகலிடமாக பா.ஜ.க கட்சி உள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் பா.ஜ.க உறுப்பினர்களாக இருக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?