India
பாகிஸ்தான் என கூறிய விவகாரம் : நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது,”கோரிபால்யாவில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம் பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு,”கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று அடையாளப்படுத்தக் கூடாது. அப்படி அழைப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. இது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது என்பதை உணர வேண்டும்.
அதுமட்டுமல்லாது, பாலினம் சார்ந்த கருத்துகளை ஒரு சாதாரணக் கண்ணோட்டத்தில் பேசினால், அது சமூகத்தில் ஆணாதிக்க, பெண் வெறுப்புக் கருத்தாக மாறக்கூடும். எனவே நீதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் மாண்புடன் நீதிபதிகள் ஒத்துப்போக வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால் மேல் நடவடிக்கை தவிர்க்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
Also Read
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
-
“டிட்வா புயலையொட்டி சென்னையில் 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்!” : சென்னை மாநகராட்சி தகவல்!