India
குழந்தைகளின் ஆபாசப் படம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தாக அவர் மீது அம்பத்தூர் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி ஆபாச படங்களை எடுத்து அதை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ அல்லது வெளியிட்டாலோ குற்றமாகும். அதுபோன்ற குற்றச்செயலில் ஈடு படவில்லை என்பதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அப்போது, குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆபாச படம் பார்த்த நபர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை சரியாக கையாளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளார்” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!