India
திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்... அதிகாலை நடந்த கோரத்தில் 6 பேர் பரிதாப பலி - 2 பேர் கைது !
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள ரானியா (Rania) என்ற பகுதியில் RP Poly Plast Private Ltd என்ற மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்.21) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியுள்ளது.
அந்த தீ, அங்கிருந்த மெத்தை மேல் பரவி மொத்தமாக தீப்பிடித்துள்ளது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் மேற்கூரை இடிந்தது. இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு அளித்த தகவலின்பேரில், விரைந்து வந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கொடூர தீ விபத்தில் உடல்கருகி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு மேலும் 3 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து போலீஸார் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?