India
ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற பயணிகள் : பீகாரில் கொடூரம் !
பீகாரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குடும்பத்தினர் தங்கள் 11 வயது மகளுடன் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது ரயிலில் கூட்டமாக இருந்ததால் அந்த 11 வயது சிறுமியை ரயில்வே ஊழியரான பிரசாந்த் குமார் என்பவர் தனது அருகே அமரவைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுமியின் அருகில் நின்றுகொண்டிருந்த சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திகொண்ட ரயில்வே ஊழியர் பிரசாந்த் தனது அருகில் அமர்ந்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கழிவறையில் இருந்து வெளியே வந்த தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை ரயில்வே ஊழியர் பிரசாந்திடம் இது குறித்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குள் நடந்ததை அறிந்த சக பயணிகள் ஒன்று கூடி, ரயில்வே ஊழியர் பிரசாந்தை தாக்கியுள்ளனர். நெடுநேரம் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கு வந்த ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ரயில்வே ஊழியர் பிரசாந்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?