India
”இந்தியா என்ற கருத்தியலின் பாதுகாவலர்” : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி புகழஞ்சலி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்று சீத்தாராம் யெச்சூரி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா என்ற கருத்தியலின் பாதுகாவலர் சீதாராம் யெச்சூரி என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “சீதாராம் யெச்சூரி ஒரு சிறந்த நண்பர்.
நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா என்ற கருத்தியலின் பாதுகாவலராகத் திகழ்ந்தவர். நாட்டின் பல பிரச்சனைகள் பற்றி யெச்சூரியுடன் நீண்ட நேரம் விவாதித்திற்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் நண்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. மேலும், அவரின் உடலை ஆய்வுக்காகவும் கல்விக்காகவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமளித்திருக்கிறது அவரது குடும்பம் முன்வந்துள்ளது.
Also Read
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!
-
11 சவரன் நகை திருட்டு வழக்கு : த.வெ.க பெண் நிர்வாகி கைது!