India
மணிப்பூரில் மீண்டும் வன்முறை : துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது. மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த மைரெம்பாம் கொய்ரெங் சிங் வீட்டின் மீது ராக்கெட் போன்ற பொருள் விழுந்து 70 வயது முதியவர் உயிரிழப்பு.5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ராக்கெட் குண்டை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிரிபாம் மாவட்டத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் தனியாக வசித்து வந்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து வன்முறையாளர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பின்னர் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு மேலாக இம்மாநிலத்தில் வன்முறை நீடித்து வரும் நிலையில் ஒருமுறைகூட பிரதமர் மோடி மணிப்பூர் வந்து மக்களை சந்திக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !