India
8 மாதத்தில் இடிந்த சத்ரபதி சிவாஜி சிலை! : மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
NDA கூட்டணி ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தில் 8 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக, சிவாஜியிடம் மன்னிப்பு கோருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜியை சிறப்பிப்பதாக, கடந்த டிசம்பர் மாதம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட சிலை, மழைக்காற்றுக்கு கூட தாங்காமல் இடிந்து விழுந்து பல பாகங்களானது.
இதனால், தேசிய அளவில் NDA அரசின் மீது அதிருப்தி அதிகரித்தது. மோடியால் திறக்கப்படும் எந்த கட்டுமானமும், ஓராண்டு கூட நல்லபடியாக தாக்குப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அவ்வாறு தாக்குப்பிடிக்காமல் போன கட்டுமானங்களுக்கு ராமர் கோவில், புதிய நாடாளுமன்றம், டெல்லி விமான நிலைய மேற்கூரை, குஜராத் சாலைகள், மகாராஷ்டிரத்தில் நீண்ட பாலம் உள்ளிட்ட பல எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, மக்கள் வரிப்பணம் காற்றில் கரைகிறது என நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். எனினும், இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஒரு நிகழ்விற்காக மகாராஷ்டிர மக்களிடையே உரையாடிய போது, “சிலை உடைந்ததற்கு, சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !