India
கலைஞர் கொண்டுவந்த 3% உள் ஒதுக்கீடு! : மருத்துவம், பொறியியலில் இணைந்த ஆயிரக்கணக்கான அருந்ததியர் மாணவர்கள்!
அருந்ததிய மாணவ/ மாணவிகளுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்த மருத்துவம், பொறியியல் மீதான ஆசையை எட்டிப் பறித்துக்கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
2009ஆம் ஆண்டிற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி, கோவை PSG கல்லூரி, சென்னை SSN கல்லூரிகளில் அருந்ததிய மாணவ/ மாணவிகள் பயில்வது என்பது வெறும் கனவாகவே இருந்தது.
அக்கனவை நினைவாக்கும் பொருட்டிலும், சமூகநீதியையும், சம உரிமையையும் நிலைநாட்டும் பொருட்டிலும் முன்னாள் தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர், 2009ஆம் ஆண்டு பட்டியலின பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 18% இடஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதனால், 2009-10 கல்வியாண்டில் முதன் முறையாக 56 அருந்ததியர் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் இடம்பெற்றனர்.
அதன் தொடர்ச்சி, ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, 2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டு காலத்தில், இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களும் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளனர்.
இது தவிர பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான அருந்ததியினர் மாணவர்கள் இணைந்து படித்து, இன்று பல உயர் பதவிகளை எட்டிப்பிடித்துள்ளனர். பலர் பதவி வழங்கும் இடத்திற்கும் சென்றுள்ளனர்.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் கல்லூரி அனுமதி கட் ஆஃப் மதிப்பெண்ணே, அருந்ததியர் பெற்ற பலனை தெளிவாக உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆப் மதிப்பெண்கள்
OC - 200; BC - 200; BC M - 199.5; MBC - 199.5; SC - 198.5; SC A - 185.5
அண்ணா பல்கலைக்கழக இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள்
OC - 200; BC - 199.5; BC M - 198; MBC - 198.5; SC - 195; SC A - 186
அண்ணா பல்கலைக்கழக ஐ.டி கட் ஆப் மதிப்பெண்கள்
OC - 199; BC - 198.5; BC M - 198; MBC - 198; SC - 191.5; SC A - 176
அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கட் ஆப் மதிப்பெண்கள்
OC - 195.5; BC - 193.5; BC M - 191; MBC - 191.5; SC - 182.5; SC A - 168
இது போன்ற எல்லைத்தொடும் மதிப்பெண்களை, உழைக்கும் மக்கள் எட்டிப்பிடிக்க இன்றும் கடினமான சூழலே நிலவும் நிலையில், கலைஞர் பெற்றுத்தந்த 3% உள் ஒதுக்கீடு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!