India
விபத்தில் சிக்கிய இளம்பெண்... உதவுவது போல ஆட்டோவில் ஏற்றி பாலியல் வன்கொடுமை : பெங்களுருவில் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள HSR லேஅவுட் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு பார்ட்டி செய்த அவர், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இதனால் அந்த மாணவி போதையில் இருந்துள்ளார்.
பின்னர் பார்ட்டி முடிந்ததும் போதையில் வெளியே வந்த மாணவி தனது இருசக்கர வாகனத்தில் தனியே வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது போதையில் இருந்ததால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் இதனை கண்டு இளம்பெண் தனியே இருப்பதை அறிந்து தனது நண்பர்களுக்கு இது குறித்து கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர்களும் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல அவரை ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பெண் கர்நாடகாவை சேர்ந்தவர் கிடையாது என்றும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!