India
வயநாடு பேரழிவு : மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தில் EMI பிடித்தம் செய்த வங்கி : கேரள முதல்வர் கண்டனம் !
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கொண்டோண்டனர். பல நாட்கள் நடைபெற்ற மீட்புப்பணியில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், இந்த பேரழிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள மாநில அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய நிலையிலிலும், அதனை ஒன்றிய அரசு மறுத்துவிட்டது .
இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஏராளமானோர் நிதியுதவி செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உலா மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது. மேலும், இந்த தொகை சம்மந்தப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இவ்வாறு நிவாரணமாக வழங்கப்பட தொகையில் இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான கேரளா கிராமிய வங்கியே இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி அந்த பகுதி மக்கள் வங்கி கிளையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது குறித்துப் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும். அதனை விட்டு இந்த செயலில் ஈடுபட்ட வங்கியின் செயல் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார். மேலும், பிடிக்கப்பட்ட இ.எம்.ஐ தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?