India
அதிகாரியின் சேரில் அமர்ந்த குரங்கு... சல்யூட் அடித்து மரியாதை செய்த உ.பி. அயோத்தி போலீஸ் - வைரல்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ளது ராமஜென்மபூமி காவல் நிலையம். இங்கு தேவேந்திர குமார் என்ற காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெரிய அதிகாரியான இவர், கடந்த ஆக 15-ம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே அதிகாரி தேவேந்திர குமாரின் நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த குரங்கை அதிகாரி கண்டவுடன் அதனை விரட்டாமல், அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரு மேலதிகாரி, குரங்குக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் இராமர் கோயில் அமைந்திருப்பதால் அந்த குரங்கை கடவுள் போல் நினைத்து அந்த குரங்கை ஒரு காவல் அதிகாரியே சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி, குரங்குக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!