India
ஹரியானாவில் வினேஷ் போகத்தால் பா.ஜ.கவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : என்ன அது?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கத்திற்கு ஒன்றிய அரசு முறையிட்டு இருக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தினர்.
ஆனால் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அலட்சியமாக நடந்து கொண்டது. மேலும் பா.ஜ.க ஆதரவாளர்கள் வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தி வருகின்றனர். இருந்தும், பொதுமக்கள் அனைவரும் வினேஷ் போகத் பக்கமே இருக்கிறார்கள்.
இந்நிலையில், வினேஷ் போக்கத்திற்கு ஹரியானா பா.ஜ.க மாநிலங்களவை MP பதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க அவருக்கு 30 வயதாகவில்லை என்று மழுப்பலாக பதிலளித்துள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது அனைத்து கட்சிகளும் வினேஷ் போகத்திற்கு MP பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் ஹரி யானாவில் சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ள நிலையில், வினேஷ் போகத் விவகாரம் பா.ஜ.கவிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!