India
65 நாட்களில் 17 ரயில் விபத்துகள்! : தவறுகளை தட்டிக்கழிக்கிறதா பா.ஜ.க?
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின், ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, சீர்திருத்தம் என்ற பெயரில் பல சர்ச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை வரையறை, மாநில வருவாயை நசுக்கும் வகையில் பட்ஜெட் முன்மொழிவுகள், உள்துறையில் குடியுரிமை திருத்தச் சட்டம் வரையறை என மக்களை வஞ்சித்த நடவடிக்கைகள் ஏராளம்.
அதில், முக்கிய பங்கு ரயில்வே துறையையும் சாரும். வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே ஆண்டில் அதிகப்படியான ரயில் விபத்துகள் என்றால், அது 2023ஆம் ஆண்டில் நிகழ்ந்தது தான்.
இதனால், மக்கள் அச்சத்துடன் ரயில் பயணங்களை மேற்கொள்ள நேரிட்டது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்பாவது, ரயில்வே துறையில் மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் மக்களை அதிருப்தியடைய வைத்தது ஒன்றிய பா.ஜ.க அரசின் முடிவு.
கடந்த ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ், 18ஆவது மக்களவையிலும் ரயில்வே அமைச்சராக நீட்டிக்கப்பட்டார். அதற்கேற்ப, ரயில் விபத்துகளும் நீடிக்கத்தொடங்கியுள்ளது.
இவ்விபத்துகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தபோது, “இவை எல்லாம், சிறிய சிக்கல்கள்” என பொறுப்பின்றி பதிலளித்தார் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சி, தனது X தள பக்கத்தில், “மக்களவை தேர்தலுக்கு பின், புதிதாக பொறுப்பேற்றிருக்கிற மோடி அரசின் முதல் 65 நாட்களில் 17 ரயில் விபத்துகள் அரங்கேறியுள்ளன. அவற்றில், நேற்று (13.8.24) மத்தியப் பிரதேசத்தில் நடந்த விபத்தும் ஒன்று. ரயில் விபத்துகளால் இதுவரை சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனினும், இது ஒன்றிய அமைச்சரை பொறுத்தவரை சிறிய சிக்கல் தானோ?” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!