India
5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும்... பேரம் பேசி லஞ்சம் கேட்ட உ.பி. போலீஸ்... ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி !
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் கன்னௌஜ் என்ற பகுதியில் துணை ஆய்வாளராக ராம் கிரிபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவரது காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் தொடர்பான வழக்கு இருந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக அந்த . துணை ஆய்வாளர் ராம், விவசாயியிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த லஞ்சம் கேட்டது தொர்பான ஆடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் இருக்கும் அந்த ஆடியோவில், விவசாயியிடம் அந்த போலீஸ், 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்கிறார். ஆனால் தன்னால் 5 கிலோ கொடுக்க முடியாது என்றும், தான் மிகவும் வறுமையில் இருப்பதால் 2 கிலோ கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த போலீஸ், முதலில் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் பேரம் பேசி, இறுதியில் 3 கிலோவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் கிரிபால் விவசாயியிடம் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பலரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைத்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, உருளைக்கிழங்கு என்பது பணத்திற்கான Code Word என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!