India
”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” : பா.ஜ.கவினருக்கு கேரள இளைஞர் பதிலடி!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமான இடிந்து தரைமட்டமானது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திபில், ”காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது ராகுல் காந்தி சென்ற வாகனத்தை நிறுத்தி இளைஞர் ஒருவர், நிலச்சரிவின் பாதுப்புகள் குறித்து விளக்கினார். ஆனால் இதை பா.ஜ.கவினர் ராகுல் காந்தியை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக போலியாக வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் ரெஜினாஸ், என்ன நடந்தது என்பதை விளக்கி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தவில்லை. அவர் எங்கள் MP மட்டுமல்ல எங்கள் குடும்பத்தில் ஒருவர். நான் அவரிடம் நிலைமையை விளக்கினேன். இதை பா.ஜ.கவினர், நான் அவரை தடுத்து நிறுத்தியதாக பொய்யாக திரிகின்றனர்.” என கூறியுள்ளார்.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !