India
பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில், உள் இடஒதுக்கீடு செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் ஏற்கனெவே உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர், அருந்ததியினருக்கு மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இம்மூன்று மாநிலங்களிலும் உத்தரவிட்டிருந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், வெவ்வேறு காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்குகளுக்கு முறையே, 2004 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது உச்சநீதிமன்றம்.
எனவே, அதற்கு சரியான தீர்வுக்காண, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (1.8.24) புதிய தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில், பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பட்டியல், பழங்குடியினர் எதிர்கொள்ளும் பாகுபாடு காரணமாக அவர்களால் இலகுவாக முன்னிலைக்கு வர முடியவில்லை. அதனை சரி செய்யும் வகையில், அரசியல் சாசன பிரிவு 14 துணை வகைப்பாட்டை அனுமதிக்கிறது” என்றும், ”SC,ST பிரிவினருக்கு கிரீமி லேயரில் (Creamy layer ) இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!