India
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி : பா.ஜ.க கூட்டணியில் விரிசல்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை உறுதி செய்தனர்.
மேலும் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் ஆகியோருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு கூட்டணியில் விரிசலை உறுதி செய்துள்ளது.ஒன்றிய அரசு ஆளுநர்கள் மூலம் முதலமைச்சர் ரங்கசாமியை மக்கள் பணிகளை செய்ய விடாமல் முடக்கிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!