India
சென்னை to டெல்லி - விஸ்தாரா விமானத்தில் ரூ.93 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்பனை: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விஸ்தாரா விமா னத்தில் ரூ.33 ஆயிரத்திற்கான டிக்கெட் ரூ.93 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது என்று மக்களவையில் கழகஎம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
மக்களவை கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலையில் கூட்டம் தொடங்கியதும் கழக உறுப்பினர் தயாநிதிமாறன் பேசியதாவது: –
விஸ்தாரா விமானத்தில் ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சாப்ட்வேரை டி.சி.எஸ். நிறுவனம் இயக்கி வருகிறது. நான் அந்த விமானத்தில் சென் னையில் இருந்து டெல்லிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தேன். அதில் டிக்கெட்டின் விலை ரூ.33 ஆயிரம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ரூ.93 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல், டிக்கெட் முன்பதி வை ரத்து செய்யும்போதும் அதிக ளவு முறைகேடு நடைபெறுகிறது.இதுகுறித்து விமான போக்கு வரத்துத் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்துபேசிய ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகையில், ‘இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?