India
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் - ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் நீட் வினாத்தாள் கசிவு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, "நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.நாடாளுமன்றத்தில் நீட தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன்? என்று தி.மு.க MP கலாநிதி வீராச்சாமி கேள்வி எழுப்பினார்.
மேலும் கேள்வி நேரத்தில் பேசிய தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ”சென்னையில் மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், நாம் இந்திய ஒன்றியத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.” என பேசியுள்ளார்.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!