India
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : MPக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலால் பரபரப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகிய MPக்களுக்கு காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து எம்.பிக்கள் புகார் அளித்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி தொடங்கியுள்ளனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?