India
வகுப்பறையில் செருப்பு அணியக்கூடாது, ஆசிரியர்களை குருஜி என்றுதான் அழைக்கவேண்டும் - உ.பி கல்வித்துறை !
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கல்வியில் காவி மயத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என திட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் அவரை பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நுழைத்து வருகிறது. தங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இதை எளிதாக செய்து வருகிறது பா.ஜ.க அரசு.
ஆனால் எதிர்க்கட்சி மாநிலங்களில் இப்படி எளிதாகச் செய்ய முடியவில்லை. இதனால் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் தங்களது தந்திர வேலைகளைச் செய்து வருகிறது. மேலும், இந்துத்துவ எண்ணம் கொண்டவர்களை கல்வித்துறை அதிகாரிகளாகவும் நியமித்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கல்வியை குருகுல நடைமுறைக்கு இழுத்துச் செல்லும் வகையில் உத்தரவு பிறப்பித்த கல்வித்துறை இயக்குனரின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் இயக்குனர் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒரு உத்தரவை அனுப்பி உள்ளார்.
அதில் மாணவர்கள் வகுப்பறைக்குள் செருப்பு, ஷூ போன்ற எந்த காலணிகளையும் அணியக்கூடாது. ஆசிரியர்களை குருஜி என்று தான் அழைக்க வேண்டும். ஆசிரியர்களும் டீச்சர், சார் என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் போன்றவற்றை அணியக்கூடாது. பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!