India
தமிழ்நாட்டின் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? : திருச்சி சிவா MP கேள்வி!
18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் ஜூன் 24 ஆம் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.கள் பதிவயேற்பு நடைபெற்றது. பின்னர் நடந்த சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவியல் பேசிய தி.மு.க எம்.பி, திருச்சி சிவா, ”புதிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.நாங்கள் உடனே நடவடிக்கை எடுத்து விட்டோம் என்கிறீர்கள். ஆனால் இந்த தவறுகள் ஏன் நடைபெற்றது?
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முந்தையை காங்கிரஸ் ஆட்சியில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் நீங்கள் அமல்படுத்தினீர்கள்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும். நீட் வேண்டாம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க மறுப்பது ஏன்?. மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்திருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!