India
இதுதான் சமூக நீதி... பதவியேற்றவுடன் ராகுல் செய்த செயலால் மக்களவையில் நெகிழ்ச்சி !
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பிரசாரத்தின்போது, அரசியலமைப்பை மாற்றுவதே நோக்கம் என்ற வகையில் பேசி வந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலும் மோடி உட்பட பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அரசியலமைப்பை பாதுகாப்பது நமது கடமை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதிலும் ராகுல் தனது ஒவ்வொரு பிரசாரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய புத்தகத்தையும் வைத்துக்கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது மக்கள் மத்தியில் சிறந்த கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கிய நிலையில், பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் வைத்து எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மீதமிருக்கும் எம்.பி-க்கள் இன்று (ஜூன் 25) பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது அவர்கள் உறுதிமொழியை வாசித்து, அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். பிறகு, அங்கிருக்கும் சபாநாயகருக்கு கைகுலுக்கி வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகருக்கு பின்னால் இருக்கும் உதவியாளருக்கும் கைகுலுக்கி சிரித்த முகத்துடன் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். அங்குள்ள பதவியேற்ற அனைத்து எம்.பி-க்களும் சபாநாயகருக்கு மட்டும் கைகுலுக்கி சென்ற நிலையில், ராகுல் காந்தி மட்டும் பின்னால் இருப்பவருக்கும் அவரே சென்று கைகுலுக்கிய நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!