India
இந்தியா வந்ததும் கைது செய்யப்படுவாரா பிரஜ்வல் ரேவண்ணா ? - கர்நாடக அமைச்சரின் பதில் என்ன ?
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த மாதம் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் கைது செய்ய முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "பிரஜ்வல் ரேவண்ணா இந்திய விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவரை கைது செய்யலாமா என்பதை எஸ்ஐடி முடிவு செய்யும். பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதில் தாமதம் ஏதும் இல்லை.
அந்த வீடியோவை வெளியிட அவரை தூண்டியது எது என்று தெரியவில்லை. மே 31ம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ கார்னர் நோட்டீசும் வெளியிடப்பட்டுள்ளது. அவர் வரவில்லை என்றால், அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டு, இன்டர்போல் நடவடிக்கை எடுக்கும்"என்று கூறினார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!