India
அப்பட்டமாக நடைபெறும் முறைகேடு : வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க குறியீடு!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பீகாரில் - 8, அரியானாவில் - 10, ஜம்மு -காஷ்மீரில் -1, ஜார்கண்டில் - 4 , டெல்லியில் - 7, ஒடிசாவில் - 6 , உத்தரபிரதேசத்தில் - 14 மேற்குவங்கத்தில் - 8 என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கியது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம், ரகுநாத்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் 5 வாக்குப்பதிவு ஏந்திரங்களில் பா.ஜ.க என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகவே பா.ஜ.கவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு முடிந்து மூன்று நாட்கள் கழித்துதான் வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
இதுபலத்த சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குறிவருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு ஏந்திரங்களில் பா.ஜ.க என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மெய்பிக்கும் விதமாக உள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!